நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்

பினாங்கு:

நோன்பு பெருநாள் முதல், இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம், ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்தும் மலேசியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இந்த இலவசப் படகுப் பயணங்கள், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், பொதுப் பயணத்தை எளிதாக்குவதற்காக, பினாங்கு துறைமுக ஆணையமும் பினாங்கு துறைமுக நிறுவனமும் (PPSB) இணைந்து கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று பினாங்கு துறைமுக ஆணையத் தின் (SPPP) தலைவர் யோ சூன் ஹின் கூறினார்.

"இந்த இலவசப் படகுச் சேவையானது பினாங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மேலும் நிலையான, பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset