செய்திகள் மலேசியா
3,333 பேருக்கு அரிசு மூட்டைகள் வழங்கப்பட்டது; வசதிக் குறைந்த மக்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது: டத்தோ ஜவஹர் அலி
கோலாலம்பூர்:
நாட்டில் வசதிக் குறைந்த மக்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது.
அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.
அல் மதரஸத்துல் ஃபரீதிய்யா ஸ்தாப்பாக் ஸ்ரீரம்பாயில் செயல்பட்டு வருகிறது.
ரமலானை முன்னிட்டு கடந்த வாரம் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
1995ஆம் ஆண்டு முதல் பெருநாளை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
ஆனால், இவ்வாண்டு 2,500த்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த காலங்களில் அரிசி மூட்டைகள் வழங்க அல் மதரஸதுல் ஃபரீதிய்யா முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 3,333 ஆயிரம் பேருக்கு அரசி மூட்டைகள் இன்று காலை வழங்கப்பட்டது.
பல்லின மக்கள் நேரடியாக வந்து இந்த உதவியை பெற்று சென்றனர்.
நாட்டில் வசதிக் குறைந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த உதவிகளை அல் மதரஸதுல் ஃபரீதிய்யா செய்து வருகிறது.
வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்த இலக்கு கொள்ளப்பட்டுள்ளது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
இதனிடையே மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரஸ்மா தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின், எஸ். எம். எஸ் தீன் குழுமத் தலைவர் டத்தோ சிராஜுத்தீன், மியாக் நிறுவனத்தின் யூசுஃப் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மாஸ்லான்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
