செய்திகள் மலேசியா
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
ரந்தாவ் பஞ்சாங்:
ஹரிராயா திருநாளை முன்னிட்டு தாய்லாந்திற்கு திரும்பும் மக்களின் வருகையால் ரந்தாவ் பஞ்சாங் எல்லைப் பகுதியிலுள்ள குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாக நுழைவாயில் இன்று அதிக கடும் நெரிசலுடன் காணப்பட்டது.
அதிகாலை 4.30 மணி முதலே மக்கள் திரண்டதுடன், எல்லைக்குள் நுழைய முயலும் வாகனங்கள் இரண்டு கிலோமீட்டருக்கும் மேல் நீண்ட வரிசையில் சிக்கியிருந்தன.
தாய்லாந்தை சேர்ந்த 38 வயதான சகீனா ரஹ்மான், இந்த நெரிசல் வழக்கமானதென கூறினார். கோலாலம்பூரிலிருந்து அதிகாலை வந்த அவர், நுழைவாயிலில் முன்கூட்டியே காத்திருந்ததாக தெரிவித்தார். கடுமையான நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே திரும்புவதாகவும், ஆறு மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், எல்லைப் பகுதியிலுள்ள மோட்டார் வாடகை சேவை வழங்குபவர்களுக்கு இந்த நெரிசல் வருமானமாக மாறியுள்ளது. அதிகமான பயணிகள் சேவையை பயன்படுத்துவதால் அவர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தாலும், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், மார்ச் 15 முதல் ரந்தாவ் பஞ்சாங் உள்ளிட்ட மூன்று எல்லைச் சாவடிகளில் செயல்பாட்டு நேரம் காலை 6 மணிக்கே தொடங்கும் வகையில் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு சுலபத்தையும் கூடுதல் வசதியையும் வழங்கும் என மக்கள் வரவேற்றுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மாஸ்லான்
March 18, 2026, 6:14 am
