செய்திகள் மலேசியா
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மஸ்லான்
பெட்டாலிங் ஜெயா:
முன்னாள் உறுப்பினர்கள் யாவரும் மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் அஹ்மத் மாஸ்லான் தெரிவித்துள்ளார்.
இதில் முன்னாள் தலைவர் துன் டாக்டர் மஹாதீர் முகமது போன்ற முக்கிய தலைவர்களும் அடங்குவர் என அவர் கூறினார்.
யாவரும் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பங்களைக் கட்சியின் உயர்மட்ட தலைமையினர் பரிசீலிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கட்சி “மன்னிப்போம் மறப்போம்” என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும் கூறினார்.
மஹாதீர் விண்ணப்பித்தாலும், அது உச்ச கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அம்னோவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். விண்ணப்பம் வந்தால், அதை விவாதித்து, கூட்டு முடிவு எடுப்போம்,” என அவர் பொதுப்பணித்துறை, CIDB உடன் கூடிய இஃப்தார் நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொண்டவர்கள், தன்னிச்சையாகக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள், புதியதாக இணைவதற்காக விரும்புவோர் ஆகிய பல்வேறு தரப்பினரும் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
துன் டாக்டர் மஹாதீர் அவர்கள் 1940களில் அம்னோவில் இணைந்தார். 1959ஆம் ஆண்டு கெடா அம்னோ தலைவராக உயர்ந்தார். பின்னர் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவரை கட்சியில் இருந்து நீக்கியிருந்தாலும், பின்னர் மீண்டும் இணைந்து 1975ஆம் ஆண்டு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981ஆம் ஆண்டு கட்சித் தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு மே மாதத்தில், அப்போது பிரதமராக இருந்த அப்துல்லா அஹ்ம்மத் படாவியின் நிர்வாகத்தை எதிர்த்து அவர் கட்சியை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் இணைந்த அவர், 2016ஆம் ஆண்டு நஜிப் ரசாக் தலைமையை எதிர்த்து மீண்டும் விலகினார்.
அதன்பின் அவர் பெர்சாத்து, பெஜுவாங், கெரக்கான் தனா ஆயிர் கூட்டணியை வழிநடத்தி, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் “மலாய் செயலாளர் குழு” ஒன்றை உருவாக்கி, மலாய் சமூக நலன்களை ஒரே குடையின் கீழ் முன்னெடுக்க முயன்றார்.
இதற்கு முன்னர், அம்னோ தலைவர் அஹ்ம்மத் சாஹிட் ஹமிடி, ரமலான் ஆன்மீகத்தை முன்னிட்டு, முன்னாள் உறுப்பினர்கள் யாரும் எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் சேரலாம் என்றும், கடந்த பிழைகள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், கட்சியின் துணைத் தலைவர் காலித் நோர்டின் தலைமையிலான “ருமா பாங்சா” பணிக்குழு, மீண்டும் சேரும் செயல்முறையை ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டது.
முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் மீண்டும் சேர விண்ணப்பித்துள்ள நிலையில், முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் தன் இடைநீக்கத்தை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
