செய்திகள் மலேசியா
வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலுக்கு அமைச்சரவையின் தீர்மானம் அவசியம்: கல்வித் துறை
பெட்டாலிங் ஜெயா:
பள்ளி வகுப்புகள் தற்போது வழக்கம்போல தொடரும், மேலும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் (PdPR) முறையை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸாம் அஹ்ம்மத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, நேற்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் முறையைக் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது; இறுதி முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும்.
இதற்கு முன், வெள்ளிக்கிழமை அரசு பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்ஸில், பொதுத்துறைக்கான வீட்டிலிருந்து வேலை (WFH) நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.
இந்த இரு முன்மொழிவுகளும் மத்திய கிழக்கு போரின் காரணமாக அதிகரித்துள்ள எரிசக்தி விலைகள் தொடர்பான சூழ்நிலைக்குப் பதிலளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளன.
பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சமூக ஊடகங்களில் பரவி வரும் “இணையம் வழி கற்றல் கற்பித்தல் நடைபெறும்” என்ற வதந்திகளைப் பற்றி அஸாம் விளக்கம் அளிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதை உறுதி செய்வதோடு, இதில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலனையும் பாதுகாக்க கல்வி அமைச்சு விரும்புகிறது என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 1:24 pm
தேசியக் கூட்டணியில் மஇகா இணைந்ததை டத்தோஶ்ரீ சரவணன் நிராகரித்தார்
March 17, 2026, 12:19 pm
கோலாலம்பூர் சந்தைகளில் KPDN அதிகாரிகள் சோதனை; வியாபாரிகள் விலைப் பட்டியலை அவசரமாக பொருத்தினர்
March 17, 2026, 12:19 pm
மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்
March 17, 2026, 12:18 pm
ஈப்போ மாநகரில் தமிழ் திரைப்படம் தயாராகிறது
March 17, 2026, 12:17 pm
ஓய்வுபெற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வகுப்பு E உரிமம்: அரசு சிறப்பு திட்டம்
March 17, 2026, 12:17 pm
