நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

115 இடங்கள் என்ற தேசிய முன்னணியின் இலக்கை மஇகா ஆதரிக்கிறது; பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும்: டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்:

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் 115 நாடாளுமன்ற இடங்களை இலக்காகக் கொண்ட தேசிய முன்னணியின் முடிவை மஇகா வரவேற்கிறது.

மேலும், முன்கூட்டிய தேர்தல் பணிகளை தொடங்குவதற்காக ஒவ்வொரு இடத்திற்கும் உடனடியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என மஇகா தேசிய வியூக இயக்குநர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.

இந்த முன்கூட்டிய நடவடிக்கை, 115 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பையும் உறுதியையும் காட்டுகிறது.

இதன் மூலம் கூட்டணி இயந்திரம் ஒவ்வொரு பகுதியிலும் வியூக ரீதியாக செயல்பட வழிவகுக்கும்.

போட்டியிடப்படவுள்ள 115 நாடாளுமன்ற இடங்களுக்கும், மாநில சட்டமன்ற இடங்களுக்கும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக நியமிப்பதன் மூலம், பொதுத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளை தேசிய முன்னணி தலைமை தொடங்க வேண்டும்

அரசியலில், நேரம் மிகவும் முக்கியமானது. எனவே, தேர்தலுக்கான தயாரிப்புகளை இப்போதிலிருந்தே தொடங்குவதற்காக, தேசிய முன்னணி தலைமை உடனடியாக நாடாளுமன்ற, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset