நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“ஒத்துழைத்த பிறகும் சோதனை ஏன்?”: தொழிலதிபர் விக்டர் சின் கேள்வி

கோலாலம்பூர்: 

தொழிலதிபர் விக்டர் சின் பூன் லோங், சமீபத்தில் தன்னுடைய சொத்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்து மலேசிய அரசுப் போலிசார் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி கோலாலம்பூருக்கு திரும்பி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்த போதிலும், இத்தகைய நடவடிக்கை ஏன் தொடர்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

'Mafia korporat' தொடர்பான விசாரணைக்காக, தாம் முழுமையான வாக்குமூலம் அளித்ததுடன், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தன்னுடைய இருப்பிடமும் தொடர்பு வழிகளும் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும்போது, வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், கெமென்சா, காஜாங் பகுதிகளில் உள்ள அவரது சொத்துகளில் போலிசார், பாதுகாப்பு ஆணையம் இணைந்து சோதனை நடத்தியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த நடவடிக்கையில் கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள், நகைகள், பணம், விசாரணை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அமைச்சரவை உத்தரவின் பேரில் பல அமலாக்க அமைப்புகள் இணைந்து கார்ப்பரேட் மோசடி குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றன. தன்னிடம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என விக்டர் சின் கூறியதுடன், உண்மையை நிரூபிக்க வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆதார ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset