நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை ஜம்ரி வினோத் மறுத்தார்

கோலாலம்பூர்:

பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும்  அறிக்கைகளை வெளியிட்டது தொடர்பான  குற்றச்சாட்டுகளை ஜம்ரி வினோத் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

மாஜிஸ்திரேட் ஃபைசாஹ்னூர் ஹசன் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர்,

41 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

குற்றச்சாட்டின்படி, கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி 'சட்டவிரோத கோயில்' சம்பந்தப்பட்ட ஒரு கூட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே பயம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிவை முகநூலில் வெளியிட்டதாக ஜம்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே அச்சத்தையோ பீதியையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது ஏற்படுத்தக்கூடிய வகையில் பொது தேசத்துரோகத்தை விளைவிக்கும் ஒரு கூற்றான, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி)-இன் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த குற்றத்தை மறுத்து ஜம்ரி வினோத் விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset