செய்திகள் மலேசியா
தேடலில் கிடைத்தது இஸ்லாம்: ஒரு பெண்ணின் உணர்ச்சி பயணம்
கிள்ளான்:
ஆர்வமும் கேள்விகளும் தூண்டிய மத ஆய்வு, ஒரு மனிதவள மேலாளராக பணியாற்றிய 35 வயதான பெண்ணை கடந்த ஆண்டு மே மாதத்தில் இஸ்லாமைத் தழுவ வழிநடத்தியது.
“சித்தி” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, பின்னர் இந்து மதத்தை ஏற்றதாக தெரிவித்தார். வாழ்க்கை முழுவதும் மதம் குறித்த கேள்விகளை குருமார்களிடமும் சாமியார்களிடமும் முன்வைத்து, அதே நேரத்தில் தனியாகவும் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.
அவரது வாழ்க்கையில் சவாலான கட்டமாக, தன்னை சூனியத்தால் பாதிக்கப்பட்டதாக கருதி 2024 மே மாதத்தில் இந்தியா சென்ற அனுபவத்தையும் பகிர்ந்தார். அங்கு ஒரு முஸ்லிம் நபரை சந்தித்து சிகிச்சை பெற்றதுடன், பின்னர் மலேசியாவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உஸ்தாத்தின் ஆலோசனையினால் இரண்டு மாதங்களாக இருந்த தூக்கமின்மை தீர்ந்ததாக கூறினார். இதுவே இஸ்லாமின் மீது அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் அவர், அவரது 10 வயது மகள் இருவரும் இஸ்லாமைத் தழுவினர்.
அதன்பிறகு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், வேலை இழந்த நிலையில் இருந்த அவர், இஸ்லாம் ஏற்ற ஒரு வாரத்திற்குள் புதிய வேலை பெற்றதாகவும் கூறினார். இதனை ஒரு அர்த்தமுள்ள மாற்றமாகக் கருதுகிறார்.
தற்போது, இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து வழிபாட்டு முறைகளைப் பழகிக் கொண்டிருப்பதாக சித்தி கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:19 pm
மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்
March 17, 2026, 12:18 pm
ஈப்போ மாநகரில் தமிழ் திரைப்படம் தயாராகிறது
March 17, 2026, 12:17 pm
கோலாலம்பூர் வணிகக் களத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மாற்றியமைக்கிறது
March 17, 2026, 12:16 pm
வாடகை கொள்முதல் சட்டம் 2026இல் திருத்தத்தை தேசிய பயனீட்டாளர் ஆலோசனைக் குழு ஆதரிக்கிறது: முகமத் கைர்
March 17, 2026, 11:25 am
வன்முறையும் அரசியல் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தும்: அன்வார்
March 17, 2026, 11:24 am
நோன்பு மாதத்தில் பள்ளிவாசல் முன்பு கைகலப்பு: ஒன்பது பேரைப் போலிசார் கைது செய்தனர்
March 17, 2026, 11:23 am
வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலுக்கு அமைச்சரவையின் தீர்மானம் அவசியம்: கல்வித் துறை
March 17, 2026, 11:19 am
அருண் துரைசாமி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
March 17, 2026, 10:52 am
