செய்திகள் மலேசியா
தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட கேகேபி கூட்டுறவு நிறுவனம் இன்று ஒரு முன்னோடியாக உள்ளது: தங்கராஜ்
கோலாலம்பூர்:
தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஒரு முன்னோடி கூட்டுறவு நிறுவனமாக உள்ளது.
அக்கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் இதனை கூறினார்.
கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனம் கிட்டத்தட்ட 46 ஆண்டுகளாக வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு மே தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மே தினம் தொழிலாளர்களை கொண்டாடும் தினமாகும்.
அதன் அடிப்படையில் இன்று தொழிலாளர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.
கேகேபி கூட்டுறவு நிறுவனம் நாட்டின் முன்னணி கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கும் இக்கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களின் நலத் திட்டத்திலும் முழு கவனம் செலுத்த வருகிறது.
இந்த வெற்றிக்கு தொழிலாளர்களான நமது உறுப்பினர்கள் தான் காரணம்.
இதன் அடிப்படையில் தான் இன்றைய விழா நடைபெறுகிறது என்று தங்கராஜ் கூறினார்.
முன்னதாக முன்னாள் மூத்த போலிஸ் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் இன்றைய விழாவிற்கு தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
