நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரகசிய உலகின் இரும்புப் பெண்: ‘பிளாக் கேட்ஸ்’ வீராங்கனை ப்ளாஸம் வோங் மறைவு

கோலாலம்பூர்:

மலேசியாவின் உளவுத்துறை வரலாற்றில் அழியாத தடம் பதித்த வீராங்கனை, ப்ளாஸம் வோங். இவர் ஒரு சாதாரண காவல் அதிகாரி அல்ல; அமைதியின் பின்னால் ஒளிந்திருந்த அசாதாரண துணிச்சலின் உருவகமாவார்.

மலேசியாவின் மிகவும் அறியப்பட்ட சிறப்புக் கிளை அதிகாரிகளில் ஒருவரும், ஆள்மாறாட்ட வேடத்தில் பணியாற்றியவருமான புளோசம் வோங், 87 வயதில் காலமானார்.

 பக்க வாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலை 9 மணியளவில் இந்தச் செய்தியைப் பெற்ற அவரது மகள் டாக்டர் கிறிஸ்டினா புளோசம் வெல்ச், அவரது மறைவை உறுதிப்படுத்தினார்.

ஒரு சிறப்புக் கிளை அதிகாரியாக, அவர் கம்யூனிஸ்ட் எழுச்சியின் போது ஆள்மாறாட்ட வேட நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர், கோலாலம்பூரில் ஒழுக்கக்கேடான செயல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தலைநகரில் விபச்சாரக் கும்பல்களை முடக்கும் பணியில் ஈடுபட்ட 'பிளாக் கேட்ஸ்' பிரிவில் சேர்ந்தார்.

2025 ஆம் ஆண்டில் ரோஜாக் டெய்லியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, வோங் 1950 களில் போலிஸ் படையில் சேர்ந்தார். அப்போது, சீருடைப் பணியில் பெண்கள் இருப்பது இன்னும் அரிதாக இருந்தது.

1957 ஆம் ஆண்டில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டார். பின்னர், அவர் சிறப்புக் கிளையில் பணியாற்றினார். மேலும், உணர்திறன் வாய்ந்த உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் ஆள்மாறாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

வோங் பின்னர் குற்றப் புலனாய்வுக்கு மாற்றப்பட்டு, 'பிளாக் கேட்ஸ்' பிரிவில் சேர்ந்தார். இந்தப் பிரிவு, கோலாலம்பூரில் விபச்சாரக் கும்பல்களை ஒடுக்குவதில் புகழ்பெற்றது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னர், வோங் 1993 ஆம் ஆண்டில், ஒரு போலிஸ் சூப்பிரண்டெண்டன்டாக ஓய்வு பெற்றார்.

வெளிநாட்டு முக்கிய நபர்களுக்கான பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் சட்ட அமலாக்க வட்டாரங்களில் அறியப்பட்டிருந்தாலும், அவருக்கு நெருக்கமானவர்கள், பொறுப்பு, ஒழுக்கம், தியாகம் நிறைந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கையின் பக்கத்தை அறிவார்கள்.

இறுதி அஞ்சலி நிகழ்வு, இந்த ஞாயிற்றுக்கிழமை (மே 3), திங்கட்கிழமை (மே 4) அன்று நிர்வாணா 2-ல் நடைபெறும். பின்னர், அவர் செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று அடக்கம் செய்யப்படுவார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset