நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பெருமானுக்கு குருபூஜை: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ்  கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பெருமானுக்கு இன்று குருபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சித்ரா பௌர்ணமை முன்னிட்டு அகத்தியர் பெருமானுக்கு இந்த சிறப்பு பிரார்த்தனையும் பூசையும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அகத்தியர் அருள் ஞான சபை தலைவரும் அகத்தியர் பெருமானின் தொண்டருமான எஸ். பக்தவச்சலம் தெரிவித்தார்.

காலை7.00 மணிக்கு மேல் 108 சங்காபிஷேகத்துடன் ஹோம பிரார்த்தனை நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

அகத்தியர்  பெருமானை வழிபடும் தொண்டர்கள் பெரும் அளவில் ல் கலந்து கொண்டனர்.

மதியம் 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா மற்றும் அகத்தியர் சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.

இதனிடையே இன்றைய விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட
செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் கிருஷ்ணா  அவர்கள் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் அகத்தியர் குருபூஜையை சிறப்பாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset