நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் மருத்துவமனை நெரிசல் குறித்த புகார்களுக்கு மருத்துவமனை விளக்கம்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசர, ட்ராவ்மா துறையில் நிலவும் கூட்ட நெரிசல் நிலைமைகள், சமூக ஊடகங்களில் போர்க்களம் போல் விவரிக்கப்பட்டு வரும் நிலையில், இது நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளின் காரணமாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 இந்தத் திட்டம், நோயாளிகளின் வசதியை அதிகரிப்பதையும், வசதிகளின் அளவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கோலாலம்பூர் மருத்துவமனையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹரிகிருஷ்ணா கே ஆர் நாயர் தெரிவித்துள்ளார். 

மேம்பாட்டுப் பணிக் காலம் முழுவதும், அந்தத் துறையானது, வழக்கமான இடத்தில் பாதியில் மட்டுமே இயங்க வேண்டியுள்ளது.

இடக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் அவசர, ட்ராவ்மா துறையில் சுகாதார சேவைகள் வழக்கம் போல் தொடர்வதாக அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நிலையான இயக்க நடைமுறைகளின்படி செயல்பாடுகள் இயங்குவதை மருத்துவமனை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைரலாகும் பதிவுகளில் காணப்படும் பழுதடைந்த உள்கட்டமைப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஹரிகிருஷ்ணா, இந்தச் சூழ்நிலை புதுப்பிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமானது என்று விளக்கினார்.

நோயாளிகள், உறவினர்களுக்கான கூடுதல் நாற்காலிகள், தற்போதுள்ள காத்திருப்பு கூடாரங்களின் வசதிக்கு ஏற்ப, வசதியை அதிகரிப்பதற்காகவும் வழங்கப்படும்.

மருத்துவமனை நிர்வாகம், பொதுமக்களின் அக்கறைக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஆலோசனைகளுக்கும் திறந்திருப்பதாக அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset