செய்திகள் மலேசியா
தொழிலாளர்களுக்கு உழைப்பே அவர்களின் வெற்றிக்கான மூலதனம்: டத்தோ அப்துல் ஹமித்
கோலாலம்பூர்:
தொழிலாளர்களுக்கு உழைப்பே அவர்களின் வெற்றிக்கான மூலதனமாகும்.
மிம்கோய்ன் தலைவரும் எஹ்சான் வர்த்தக குழுமத் தலைவருமான டத்தோ பிவி அப்துல் ஹமித் கூறினார்.
தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம்.
அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.
எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும்.
எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது.
இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அதை நம் சமுதாயம் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என டத்தோ அப்துல் ஹமித் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 3:12 pm
கோலாலம்பூர் மருத்துவமனை நெரிசல் குறித்த புகார்களுக்கு மருத்துவமனை விளக்கம்
May 1, 2026, 2:30 pm
