செய்திகள் மலேசியா
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
சிரம்பான்:
நாட்டில் மிகவும் பிரபலமான மணிக்கவிஞர் பாதாசனுக்கு இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இளையத் தமிழவேள் ஆதி குமணன் நினைவு விழா இன்று சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுதா இளம்பரிதி தலைமையில் இவ்விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் திருநாவுக்கரசு இந்த விழாவை சிறப்பாக நடத்தினார்.
இந்த விழாவில் சிறப்பு அங்கமாக மணிக்கவிஞர் பாதாசன் அவர்களுக்கு இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம் கவிஞருக்கு விருதை வழங்கி சிறப்பு செய்தார்.
அதே வேளையில் 2026ஆம் ஆண்டுக்கான இளைய தமிழவேள் ஆதி குமணன் சாதனையாளர் விருது வழக்கறிஞர் ஷாலினி பாலன் பிள்ளை, வழக்கறிஞர்
கோபிநாத் கருப்பனுக்கு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுதா இளம்பரிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவர்களுக்கு மாலை அணிவித்து 1,000 வெள்ளியுடன் விருதும் வழங்கி பிறப்பிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 6:22 pm
ரகசிய உலகின் இரும்புப் பெண்: ‘பிளாக் கேட்ஸ்’ வீராங்கனை ப்ளாஸம் வோங் மறைவு
May 1, 2026, 5:11 pm
தொழிலாளர்களுக்கு உழைப்பே அவர்களின் வெற்றிக்கான மூலதனம்: டத்தோ அப்துல் ஹமித்
May 1, 2026, 4:53 pm
மலேசியாவில் மின்னல் வேகத்தில் பரவும் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள்
May 1, 2026, 3:12 pm
கோலாலம்பூர் மருத்துவமனை நெரிசல் குறித்த புகார்களுக்கு மருத்துவமனை விளக்கம்
May 1, 2026, 2:30 pm
