நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயப் பிரச்சினைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு சுமூகமாக தீர்வு கானும்: டத்தோ சிவக்குமார் நம்பிக்கை

பாங்கி:

ஆலயப் பிரச்சினைகளுக்கு  சிலாங்கூர் மாநில அரசு  சுமூகமாக தீர்வு கானும் என்று மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பாங்கி லாமாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 80 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும்.

இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் பன்னீர், செயலாளர் தவனேஷ் அழைப்பின் பேரில் இவ்விழாவில் கலந்து கொண்டேன்.

இவ்வேளையில் இவ்விழாவை சிறப்பாக நடத்தியதுடன் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு எனது வாழ்த்துகள்.

திருவிழாக்கள் சமய, வழிபாடுகளை தாண்டி மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.

அதே வேளையில் இந்த ஆலயத்திலும் ஒரு சில பிரச்சினைகள் உள்ளன.

அந்தப் பிரச்சினைகளை அம்மன் பார்த்துக் கொள்வார். மேலும் இந்த ஆலயத்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அது அனைத்து பிரச்சினைகளுக்கும் சுகமான தீர்வு காணப்படும்.

குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான ஆலயங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளன என்று கூறுவது பெருமை அல்ல.

அந்த ஆலய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அவ்வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சமூகமான முறையில் தீர்வு காணும் என தான் நம்புவதாக டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset