நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி

கெப்போங்: 

கெப்போங், தாமான் ஏசான் பகுதியில் இன்று அதிகாலை ஐந்து மாடி வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில், 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதிகாலை 2.31 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, செலாயாங் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ரவாங், ஜின்ஜாங், மஞ்சலாரா ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 27 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தக் கோரத் தீ விபத்தில், பாதிக்கப்பட்ட ஐந்து வீடுகளில் ஒரு வீடு முழுமையாகவும், இரண்டு வீடுகள் 80 விழுக்காடும் எரிந்து சேதமடைந்தன. 

மற்ற இரு வீடுகள் 20 விழுக்காடு சேதமடைந்தன. மீட்புப் பணியின்போது, காலை 4.29 மணியளவில் ஒரு வீட்டின் படுக்கையறையில் இருந்த கட்டிலில் ஒருவர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சொகுசு கார்களும் இந்தத் தீயில் சிக்கி முழுமையாகச் சாம்பலாகின. தீயணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலை 7.15 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ மீண்டும் பரவாமல் இருக்கத் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்திற்கான உண்மையான காரணம் மற்றும் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்துத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset