நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் கடும் வறுமை பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்

ஷாஆலம்:

பல்வேறு பயனுள்ள வறுமை ஒழிப்பு முயற்சிகளைச் செயல்படுத்தியதன் விளைவாக, சிலாங்கூரில் நிலவிய கடும் வறுமைப் பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஷாஆலமில் தனது தலைமையில் நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட வளர்ச்சிக் கூட்டத்தில் இந்த விஷயம் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், எந்தவொரு குடும்பமும் சலுகைகளைப் பெறுவதில் இருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பு தொடர வேண்டும்.

மிக முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முன்னேறுவதற்கும், பயிற்சி மூலம் வலுவூட்டப்படுவதற்கும், அதன் மூலம் தங்களின் சொந்த வருமானத்தை ஈட்டுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மக்களின் வாழ்க்கைத் கண்ணியத்தை உயர்த்துவதற்கு சிலாங்கூரின் பொருளாதார வலிமை முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset