நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்

கிள்ளான்:

மானிய விலையில் டீசல் கிடைக்காததால் ரோரோ லோரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மலேசியா ரோரோ லோரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  டத்தோஸ்ரீ மோக் ஹா வெய் கூறினார்.

கழிவு பொருட்கள் மேலாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தான் ரோரோ லோரி துறையாகும்.

டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து இத்துறைக்கு கடுமையான செயல்பாட்டுத் தடைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்கள் இத்துறையினருக்கும் வழங்க வேண்டும்.

செயல்பாட்டுச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், குறிப்பாக ரோரோ லோரிகளுக்கு டீசல் பயன்படுத்துவதால், தற்போது இத்துறை அழுத்தத்தில் உள்ளது.

இது வெறும் செலவுப் பிரச்சினை மட்டுமல்ல, மக்களுக்குச் சேவை தொடர்வது தொடர்பான ஒரு விஷயமாகும்.

முன்னர், ஒரு லிட்டர் டீசலின் மானிய விலையான சுமார் 2.15 ரிங்கிட் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்தது.

தற்போது, ​​அதன் விலை ஒரு லிட்டருக்கு 7 ரிங்கிட் முதல் 8 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது.

இது மொத்தச் செலவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

டீசல் விலை கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் எங்கள் வருமானம் அப்படியேதான் இருக்கிறது.

நாங்கள் பழைய ஒப்பந்தங்களால் கட்டுப்பட்டிருப்பதால், எங்களால் விருப்பப்படி விலையை உயர்த்த முடியாது.

அதே வேளையில் எங்கள் லோரி வகை 'ரிஜிட் குப்பை லாரி' என்பதிலிருந்து 'ரிஜிட் ரோரோ லாரி' என மாற்றப்பட்டது.

இதனால் தாங்கள் இனி டீசல் மானியத்திற்குத் தகுதி பெறவில்லை. இதனால், மானியத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

ஆக இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும். எங்களுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில் வரும் மே 11ஆம் தேதி பிரதமர் துறையில் மகஜர் ஒன்றையும் வழங்கவுள்ளோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset