நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்

கோலாலம்பூர்:

மலேசியாவிற்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் உட்பட அவரது ஸ்லோவாக்கிய சக அமைச்சர் ஜுராஜ் ப்ளானார் ஆகியோர் ஆராய்ந்தனர்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற இருபக்கக் கூட்டத்தில் இரு அமைச்சர்களும் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, விநியோகச் சங்கிலி பின்னடைவு, தானியங்கித் தொழில், சுத்தமான எரிசக்தி, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"மலேசியா - ஐரோப்பிய ஒன்றிய (EU) உறவுகள், பகிரப்பட்ட நலன்களைக் கொண்ட பிராந்திய, சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்" என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நிறுவன ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு அமைச்சர்களும், இந்த ஆண்டு தங்களது முறையே வெளியுறவு அமைச்சுகளுக்கு இடையே, மூத்த அதிகாரிகள் மட்டத்தில் முதல் இருபக்கக் கலந்தாய்வுகளை நடத்த ஒப்புக்கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை தொடங்கி மலேசியாவில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ப்ளானார், அதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் மக்களவை தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துலுக்கு மரியாதைச் செலுத்தி சந்தித்தார். மேலும், கோலாலம்பூரில் ஸ்லோவாக்கிய குடியரசின் தூதரகத்தை மீண்டும் திறக்கும் நிகழ்வையும் அவர் துவக்கி வைத்தார்.

2025 ஆம் ஆண்டில், இரு தரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 1.22 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. இதில், மலேசியா 575.07 மில்லியன் வர்த்தக உபரியைப் பதிவு செய்தது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset