செய்திகள் மலேசியா
8,176 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வெற்றியைத் தொடர்ந்து நீலாயில் 3ஆவது மெடிகேர் சமூகநல இலவச கிளினிக் திறக்கப்பட்டது
நீலாய்:
நாடு முழுவதும் 8,176 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வெற்றியைத் தொடர்ந்து 3ஆவது மெடிகேர் சமூகநல இலவச கிளினிக் நீலாயில் திறக்கப்பட்டது.
மெடிகேர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹன் ராஜசேகரன் இதனை கூறினார்.
மெடிகேர் அறக்கட்டளை இன்று தனது மூன்றாவது இலவச கிளினிக்கை நெகிரி செம்பிலான் நீலாயில் அதிகாரப்பூர்வமாக திறந்தது.
இது மலேசியாவின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கான அதன் சமூக அடிப்படையிலான முதன்மை சுகாதாரப் பராமரிப்பின் ஒரு முக்கிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
எங்கள் கிளினிக்கிற்கு வரும் பல நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம், ஆரம்பகால நீரிழிவு நோய் போன்ற வெளிப்படாத நோய்களுடன், தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் மூன்றாம் நிலை சிகிச்சையை அடையும் நேரத்தில், நோய் பெரும்பாலும் முற்றியிருக்கும்.
இந்த இலவச மருத்துவ கிளினிக்குகள் ஆபத்தைக் கண்டறிதல், சிகிச்சையைத் தொடங்குதல், நிதிச் சுமையைக் குறைத்தல் போன்றவற்றில் முன்கூட்டியே உதவ முடிகிறது.
இந்தச் சுமையே, நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், காலம் கடந்துவிடும் வரை சிகிச்சையைத் தாமதப்படுத்தக் காரணமாகிறது.
நீலாய் போன்ற இடங்களில் வாழும் மக்கள் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெறத் தயங்குகிறார்கள்.
இது தயக்கத்தினால் அல்ல, மாறாக ஒவ்வொரு மருத்துவ ஆலோசனைக்கும் ஆகும் செலவை அவர்களால் தொடர்ந்து ஏற்க முடியாததே இதற்குக் காரணம்.
எங்கள் மருத்துவ கிளினிக்குகள் அந்தத் தடையை நீக்குகின்றன.
இது தனிநபர்கள் தங்கள் உடல் நலத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கான நம்பிக்கையையும் ஆகும்.
மேலும் எங்களின் முதல் இரண்டு மருத்துவ கிளினிக்குகள் மூலம் 8,176-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்கத்தை விரிவுபடுத்துவதும் நோக்கில் தான் நீலாயில் மூன்றாவது கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கிளினிக் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முயல் 1 மணி வரை திறந்திருக்கும் என்று ஹென் ராஜசேகரன் கூறினார்.
பரந்த தேசிய சுகாதாரப் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் மட்டும் போதாது. எப்போது, எப்படி சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதே முக்கியம்.
நீலாய் போன்ற இடங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக முதன்மை சிகிச்சையை வழங்குவதன் மூலம், நாம் எதிர்வினை சிகிச்சையிலிருந்து முன்கூட்டிய சுகாதார மேலாண்மைக்கு முன்னுதாரணத்தை மாற்றுகிறோம் என்று மேடிகேர் அறக்கட்டளையின் தலைவர் துங்கு டத்தோ யாக்கோப் கைரா கூறினார்.
முன்னதாக இந்த இலவச கிளினிக்கை கெடா துங்கு தெமெங்கோங், மலேசிய செஞ்சிலுவை சங்கத்தின் துங்கு புத்ரி இந்தான் ஷாபினாஸ் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
