செய்திகள் மலேசியா
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
நாட்டில் நடந்து வரும் ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
ஆலயங்களை உடைப்பது, திரிசூலத்தை மிதிப்பது நாட்டில் பல சர்ச்சைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆடவர்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை.
அதே வேளையில் இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டும் மஇகா அமைதியாக இருக்காது.
குறிப்பாக இவ்விவகாரத்தை வைத்து மஇகா அரசிதலும் நடத்தாது.
இதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து பேசினேன்.
ஆலய சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது உட்பட பல விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.
இந்த விவகாரம் குறித்து அவருக்கும் புரிகிறது. நானும் அவருக்கு புரியும்படி விளக்கம் தந்தேன்.
மேலும் மஇகா, மலேசிய இந்து சங்கம், மஹிமா இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக மலேசிய இந்து ஆலய செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 35 இயக்கங்கள் இந்த குழுவில் உள்ளது.
இந்த செயற்குழுவை கொண்டு ஆலயங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
யார் என்ன முயற்சிகளை செய்தாலும் ஆலயத்தையும் இந்து சமயத்தையும் ஒன்றும் செய்ய முடியாது.
இதை மஇகா உறுதியாக சொல்கிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
