நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொழும்பு கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன்

கொழும்பு:

கொழும்பு கம்பன் விழாவில் கலந்து கொள்ள மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தனது குழுவுடன் இலங்கை சென்றுள்ளார்.

இன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த கம்பன் விழாவில் இலக்கியப் பேருரையும் ஆற்ற உள்ளார்.

உலகத் தமிழர்களும், இலக்கியப் பேச்சாளர்களும், அறிவு சார்ந்த அறிஞர்களும் ஒன்று கூடும் மிகப்பெரிய அரங்காக இந்த கொளும்பு கம்பன் விழா திகழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கம்பராமாயணத்தில் மூழ்கி, இலக்கிய ஆர்வலர்களைக் கட்டிப்போடும் ஒரு மிகப்பெரும் இலக்கிய விழாவாக இது இருக்கிறது.

தமிழும், சமயமும் இரண்டு கண்களாக வாழும் டத்தோஸ்ரீ சரவணன் தவறாமல் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset