செய்திகள் மலேசியா
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
கோத்தா திங்கி:
நேற்று கோத்தா திங்கி–குளுவாங் சாலையின் கிலோமீட்டர் 8.4 பகுதியில், தனது பாட்டி ஓட்டிய காரில் பயணம் செய்த ஐந்து வயது சிறுவன், பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தான்.
பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் யூசுப் ஒஸ்மான் தெரிவித்தார். இதில் பெரொடுவா மைவி, பெரொடுவா ஆல்ஸா கார்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
மைவி காரை 50 வயதுடைய பெண் ஓட்டி வந்தார். அவருடன் 26 வயது ஆண் பயணியும், எட்டு வயது சிறுவனும் இருந்தனர். அதே சமயம் அல்ஸா காரை 61 வயதுடைய பெண் ஓட்டியிருந்தார். அவருடன் ஐந்து வயது பேரன் இருந்தான் என்றார் அவர்.
“பெரொடுவா மைவி எதிர்பாராத விதமாக எதிர் பாதையில் நுழைந்து, தெமேனின் பகுதியிலிருந்து கோத்தா திங்கி நோக்கி வந்த பெரொடுவா அல்ஸா காருடன் நேருக்கு நேர் மோதியது.
“இந்த விபத்தில், பெரொடுவா அல்ஸா காரின் பின்புற பயணி இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் தலையில் கடுமையாக காயமடைந்துள்ளான்.
கோத்தா திங்கி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கும் போது அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ் விசாரணை செய்யப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
