நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க தலைவர்களில் பலருக்கும் அம்னோவைப் போல ஒரு நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை: முஹம்மது ஹசான்

கோலாலம்பூர்:

தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களில் பலருக்கும் அம்னோ பிரதிநிதிகளைப் போல ஒரு நாட்டை நிர்வகிப்பதில் விரிவான அனுபவம் இல்லை.

அரசாங்கத்தில் உள்ள அம்னோ பிரதிநிதிகள் நம்பகமான, திறமையான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பல முக்கியமான அமைச்சுகளையும் வழிநடத்தியுள்ளனர் என்று டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கூறினார்.

அதன் பலம் குறைந்திருந்தபோதிலும், அமைக்கப்பட்ட ஏறக்குறைய அனைத்து அரசாங்கங்களிலும் அம்னோ ஒரு பங்கை ஆற்றியுள்ளது.

மலேசிய அரசியலில், நாட்டின் நிலைத்தன்மைக்கு அம்னோ ஒரு முக்கியமான துணையாகவும் எதிர்சக்தியாகவும் நீடிக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.

அம்னோவிம் பிரதிநிதிகளைப் போல நாட்டை நிர்வகிப்பதில் விரிவான அனுபவம் கொண்டவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் அதிகம் இல்லாததே இதற்குக் காரணம்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள டேவான் மெர்டேக்காவில் நடைபெற்ற  80ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset