செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ2-இல் தற்கொலை முயற்சி: சீனா திரும்பவிருந்த நிலையில் விபரீத முடிவு
புத்ராஜெயா:
சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) முனையம் 2-ன் 3ஆம் மாடிப் பால்கனியில் இருந்து குதித்ததில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கேஎல்ஐஏ மாவட்ட போலுஸ் தலைவர் உதவி ஆணையாளர் எம். ரவி, மதியம் 2.20 மணியளவில், 27 வயதான அந்தப் பெண், அழுது கொண்டும், ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டும், 3ஆம் மாடி பால்கனியின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்தார்.
"அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் முயன்றனர், இருப்பினும் அவர்களால் முடியவில்லை. அதன் பின்னர், ஒரு கேஎல்ஐஏ பாதுகாப்பு அதிகாரி அவரைக் காப்பாற்ற முயன்றார்.
"இருப்பினும், அந்தப் பெண் மல்லாடி, கேஎல்ஐஏ-வின் ஏற்றும் இறக்கும் பகுதிக்குக் (Loading Bay) குதித்தார்" என்று அவர் இன்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை வந்தடைந்த மருத்துவக் குழு, அவசர சிகிச்சை அளித்ததாகவும், சம்பந்தப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் ரவி கூறினார்.
மாலை 5 மணியளவில், சம்பந்தப்பட்ட பெண் இறந்து விட்டதாக புத்ராஜெயா மருத்துவமனை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.
"ஆய்வில், சம்பந்தப்பட்ட பெண், 27 வயதுடைய சீனக் குடிமகள் என்றும், அவர் மே 2 ஆம் தேதி சீனாவுக்குத் திரும்பும் விமானத்தில் பயணிக்க இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.
"சம்பவத்தின் காரணம் இன்னும் போலிஸ் விசாரணையில் உள்ளது. திடீர் மரணம் நடைமுறையின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார் அவர்.
இதற்கு முன்னர், கேஎல்ஐஏ முனையம் 2 பகுதியில், ஒரு உயரமான இடத்தில் இருந்த ஒரு பெண், தற்கொலைக்கு முயன்றதாக நம்பப்படும் நிலையில், விழுவதைக் காட்டும் 40 விநாடிகள் நீடிக்கும் வீடியோ ஒன்று வைரலானது.
மற்றொரு தனிச் சம்பவத்தில், ஒரு ஆண் புல் நிறைந்த பகுதியில் மல்லாந்து கிடப்பதைக் காட்டும் வீடியோ பதிவு வைரலானதாகத் தெரிகிறது. அதே விமான நிலையத்தில் அவர் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவரின் நிலை குறித்து உறுதி செய்ய முடியவில்லை.
அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய ரவி, அந்த வழக்கு இன்னும் தனது விசாரணையில் உள்ளது என்றார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 11:42 am
மலேசிய யாத்ரீகர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசல் வளாகத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்
May 2, 2026, 11:02 am
வானில் பறந்த மனிதாபிமானம்: காட்டுப்பகுதியில் துடிக்கும் உயிர்களுக்கு யார் பதிலளிப்பது?
May 2, 2026, 10:25 am
மிளகாய் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஃபாமா
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
