செய்திகள் மலேசியா
மலேசிய யாத்ரீகர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசல் வளாகத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்
மெக்கா:
மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த மலேசிய ஹாஜ் யாத்ரீகர் ஒருவர் உயிரிழந்தார்.
மலேசிய ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் முஹம்மது ஹிஷாம் ஹரூண் இதனை கூறினார்.
பகாங்கைச் சேர்ந்த 65 வயதான அந்த ஆண் யாத்ரீகர், மாரடைப்பு காரணமாக மலேசிய நேரப்படி மாலை 5.15 மணியளவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
தனது மனைவியுடன் புனித பூமிக்கு வந்திருந்த இறந்தவர், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மஸ்ஜிதில் ஹரம் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார்.
சம்பவ இடத்திலேயே சுவாச உதவி உள்ளிட்ட முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக ஜீவர் ஜபல் உமர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை மையத்தில் அந்த யாத்ரீகர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 11:02 am
வானில் பறந்த மனிதாபிமானம்: காட்டுப்பகுதியில் துடிக்கும் உயிர்களுக்கு யார் பதிலளிப்பது?
May 2, 2026, 10:25 am
மிளகாய் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஃபாமா
May 2, 2026, 9:33 am
கேஎல்ஐஏ2-இல் தற்கொலை முயற்சி: சீனா திரும்பவிருந்த நிலையில் விபரீத முடிவு
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
