செய்திகள் மலேசியா
பெண்ணை 61 முறை கத்தியால் குத்திய வழக்கு நான்கு சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
கோத்தா பாரு:
இளம் பெண்ணை 61 முறை கத்தியால் குத்திய வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இங்குள்ள கெட்டரே, காம்போங் சிமா பகுதியில் நேற்று 61 கத்திக்குத்து காயங்களுடன் கல்லூரி மாணவி ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் ஏழு நாட்களுக்கும், ஒரு பெண் உட்பட இரண்டு மூத்த குடிமக்கள் மூன்று நாட்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைக்கு உதவுவதற்காக.19 வயதுடைய இரண்டு இளைஞர்கள், 66 வயதுடைய ஒரு ஆண், 60 வயதுடைய ஒரு பெண் ஆகியோருக்கு எதிரான இந்த காவல் உத்தரவு பெறப்பட்டது.
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமிருல் அஷ்ராப் அப்துல் ரசித் இன்று முதல் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, அனைத்து சந்தேக நபர்களும் சிறை உடை அணிந்து, கைவிலங்கிடப்பட்டு, காவல்துறையினருடன் காலை 8.40 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தனர்.
நேற்று கிளந்தான் போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட்,
இங்குள்ள நெல் வயல்களுக்கு அருகிலுள்ள சாலையில் 19 வயது கல்லூரி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 11:42 am
மலேசிய யாத்ரீகர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசல் வளாகத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்
May 2, 2026, 11:02 am
வானில் பறந்த மனிதாபிமானம்: காட்டுப்பகுதியில் துடிக்கும் உயிர்களுக்கு யார் பதிலளிப்பது?
May 2, 2026, 10:25 am
மிளகாய் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஃபாமா
May 2, 2026, 9:33 am
கேஎல்ஐஏ2-இல் தற்கொலை முயற்சி: சீனா திரும்பவிருந்த நிலையில் விபரீத முடிவு
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
