செய்திகள் மலேசியா
1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தப் பிரச்சினை தொடர்பாக ரபிசியை எம்ஏசிசி விசாரணைக்கு அழைத்துள்ளது
புத்ராஜெயா:
பிரிட்டிஷ் நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸுடன் அரசாங்கம் மேற்கொண்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியை எம்ஏசிசி விசாரணைக்கு அழைத்துள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், வரும் திங்கட்கிழமை புத்ராஜயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு தனக்கு ஓர் அறிவிப்பு வந்திருப்பதாக ரபிசி கூறினார்.
அடுத்த வாரம் எனது வாக்குமூலங்கள் பெறப்படும்.
அதன் பின் தவறான தகவல்களை அளித்ததன் அடிப்படையிலோ அல்லது அமைச்சரவையை அவசரமாகக் கையெழுத்திட வைத்ததன் அடிப்படையிலோ, குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின் கீழ் என் மீது வழக்குத் தொடரப்படலாம்.
அதனால் இதை எதிர்கொள்ள எனது சட்டக் குழுவுடன் நான் தயாராகி விட்டேன்.
பிரதமர், துணைப் பிரதமர்கள், அமைச்சர்கள் என நாட்டின் பல உயர்மட்டத் தலைவர்கள் சாட்சிகளாக அழைக்கப்படவுள்ளதால்,
இது ஒரு நீண்ட மற்றும் சுவாரஸ்யமான விசாரணையாக இருக்கும் என்று பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 11:42 am
மலேசிய யாத்ரீகர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசல் வளாகத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்
May 2, 2026, 11:02 am
வானில் பறந்த மனிதாபிமானம்: காட்டுப்பகுதியில் துடிக்கும் உயிர்களுக்கு யார் பதிலளிப்பது?
May 2, 2026, 10:25 am
மிளகாய் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஃபாமா
May 2, 2026, 9:33 am
கேஎல்ஐஏ2-இல் தற்கொலை முயற்சி: சீனா திரும்பவிருந்த நிலையில் விபரீத முடிவு
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
