செய்திகள் மலேசியா
வீட்டிலிருந்து வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் உத்தரவிட்டார்; மார்ச் 17 அன்று முடிவு: ஃபஹ்மி
புத்ராஜெயா:
வீட்டிலிருந்து வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.
மார்ச் 17 அன்று இதற்கான முடிவு தெரியும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் குறித்து விரிவான மறுஆய்வு நடத்துமாறு உயர் குடிமைப் பணித் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொள்கையின் சாத்தியக்கூறு மற்றும் ஒருங்கிணைப்பை ஆய்வு செய்யும் பணியை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கும் பொது சேவைத் துறை இயக்குநரை அவர் பணித்தார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த உத்தரவை உறுதிப்படுத்தினார்.
மேலும் பொது சேவை செயல்திறனைப் பராமரிக்கும் அதே வேளையில் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
