நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து வெளியேற பிரதமரின் மருமகன் அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்தினாரா?

கோலாலம்பூர்:

வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து வெளியேற அரசு ஹெலிகாப்டரை தாம் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது உண்மை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்பின் மருமகன் ஜோவியன் மண்டாகி (Jovian Mandagie) கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் வெளியாகி இருந்தன. விமானத்தில் இருந்து படமெடுக்கப்பட்ட, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தின் புகைப்படங்களை அவர் தமது இன்ஸடகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, தன் மருமகனை மீட்பதற்காகப் பிரதமர் ஒரு ஹெலிகாப்டரை அனுப்பியதாகவும், நாடு முழுவதும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் வேளையில், பிரதமரின் மருமகன் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார் எனவும் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர்.

இதையடுத்து Jovian விளக்கம் அளித்துள்ளார். தமக்காக யாரும் அரசு ஹெலிகாப்டரை அனுப்பவில்லை என்றும், தனியார் ஹெலிகாப்டரை வாடகை அடிப்படையில் தாம் பதிவு செய்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

"நான் அப்படிப்பட்ட ஒரு நபரல்ல. இது என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். என்னை அவமானப்படுத்த நினைக்கிறீர்கள் எனில், அதைச் செய்யுங்கள். ஆனால் அது என்னைப் பற்றிய அவதூறாகும்," என்று Jovian தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset