நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தவில்லை எப்படி கூடுதல் நிதி கேட்க முடியும்  டிக்டாக் அறிவாளிகளிடம் டத்தோஸ்ரீ ரமணன் கேள்வி

கோலாலம்பூர்: 

இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தவில்லை எப்படி கூடுதல் நிதி கேட்க முடியும்.

டிக்டாக் அறிவாளிகளிடம் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இக்கேள்வியை எழுப்பினார்.

பிரதமர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.

குறிப்பாக டிக்டாக் அறிவாளிகள் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்திய சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட நிதி கூட முழுமையாக முடியவில்லை.

குறிப்பாக அமானா இக்தியாரின் பெண் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் கூட முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

இதே போன்று தெக்குன் கோஸ் பிக், எஸ்எம்இ கோர்ப் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

சூழ்நிலை இப்படியிருக்க எப்படி அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் நிதி கோரப்படும்.

ஆகவே அரசாங்கத்தை டிக்டாக்கில் குற்றம் சாட்டுபவர்கள் இதுபோன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இது தான் சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் பெரும் நன்மையாக இருக்கும்.

அதை விடுத்து அரசாங்கத்தையும் தலைவர்களையும் குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset