நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 மில்லியன் ரிங்கிட் மானியம் இந்தியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு; விரைவில் இந்தியத் தலைவர்களைப் பிரதமர் சந்திக்கிறார்: வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்

ஈப்போ: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிக விரைவில் இந்நாட்டு இந்திய நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்கவுள்ளார். 

கடந்த 60 வருடங்களாக நடைபெறாத இந்நிகழ்வு முதன் முதலில் வரலாற்று பதிவாக அமையப்போகிறது என்று பேராக் தமிழ் ஊடகவியலாளர்களின் தீபாவளி விருந்தில் கலந்துக்கொண்டபோது வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

இச்சந்திப்பில் சுமார் 47 இந்திய அரசியல் சமூக தலைவர்கள் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. 

இந்திய அரசியல் சமூக தலைவர்கள் இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணப்படும். அத்துடன் இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் திட்டங்கள் வரையறுக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

அதில் முதலாவதாக இந்நாட்டு இந்திய கிராமங்கள் மேம்பாட்டிற்கு 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து அதனை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சுக்கு வழங்கியுள்ளதற்கு அவர் பிரதமருக்கு தம் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

குறிப்பாக இந்நாட்டில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற இந்திய கிராம மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்தப்படும். இன்னும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத இந்திய கிராமங்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் உறுதி யளித்தார்.

குறிப்பாக, பேராக் மாநிலத்தில் 14 இந்திய கிராமங்களில் 7 கிராமங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. மேலும் 7 கிராமங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த 10 மில்லியன் ரிங்கிட் மானியம் இந்நாட்டு இந்தியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்துவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் மேலும் தொடர வேண்டும். 

நாட்டு மக்களின் புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மற்றவர்களை மதிக்கும் பண்பு மற்றும் மனிதநேய பண்புகள் இந்நாட்டில் வேறூன்றி இருத்தல் மிகவும் அவசியம் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.

- ஆர்பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset