நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி பரிசாக இந்தியர்களுக்கு நிலப்பட்டா: பேராக் அரசு வழங்கியது

ஈப்போ: 

பேராக் மாநிலத்தில் மஞ்சோங்கில் உள்ள   கம்போங் பெக்கான் கெர்னி, பீடோரில் உள்ள கம்போங் பாரு கோல பிக்காம் எனும் இடத்தில் சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 36 குடும்பங்களுக்கு நிலபட்டாவை மாநில அரசாங்கம்  வழங்கியது.

வறுமை நிலையில் வசித்து வந்த குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில்  குடிசைகளை அமைத்து வசித்து  வந்தனர். இந்த குடும்பங்ள் நிரத்தரமாக வசிக்க  நிலப்பட்டா கிடைக்க கடந்த 40 ஆண்டுகளுக்கு  போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த விவகாரம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்திய விவகாரங்களுக்கான தலைவராக பொறுப்பேற்றுள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான அ. சிவநேசனின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர் அந்த கிராமத்திற்கு நேரடியாக வருகை அளித்து மேற்கொண்ட குறுகிய கால  முயற்சியின் பயனால் இன்று பலன் கிடைத்துள்ளது. 

அந்த நிலத்திற்கான நிலப்பட்டாவை மாநில அரசாங்கம் தங்களிடம்  வழங்கியது தீபாவளி பரிசாக கிடைத்துள்ளதாக நிலம் கிடைத்தவர்கள தங்களின் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.

 பேரா மாநிலத்தில புறம்போக்கு (அரசாங்க நிலத்தில்) வசித்து வரும் மக்களின் நிலப் பிரச்சனைக்கு படிப்படியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது என்று அ.சிவநேசன் கருத்துரைத்தார்.

அந்த வகையில் இந்த இரு கிராமங்களில் கடந்த அறுபது  ஆண்டுகளுக்கு மேலாக வசித்து இவர்களின் நிலப்பிரச்சனைக்கு  தீர்வுக்காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு இங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் நிலப்பட்டா கிடைத்தவர்களுக்கு அதனை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது

இதில் வீட்டு வசதி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங், கல்வி துணை அமைச்சர் ஓங் கா வோ உட்பட  நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset