நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை உருவாக்கி மலேசியாவிற்கு உதவ வேண்டும்: பிரதமர் அன்வார்

சிப்பாங்: 

மலேசிய ஊழியர்களுக்கு மேம்பட்ட திறன்களில் பயிற்சி அளிக்குமாறு ஜெர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DHL போன்ற சர்வதேச நிறுவனங்களைப் பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். 

இளம் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது நீண்ட காலத்திற்கு அத்தகைய நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் என்றார் அவர். 

DHL போன்ற பெரிய நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமேஷன் மற்றும் இலக்கவியல் மயமாக்கலில் உயர்நிலை திறன் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையைப் பிரதமர் முன் வைத்தார். 

பெரிய நிறுவனங்களாக, இந்தத் துறையில் இளம் திறமையாளர்களின் திறன்களை வளர்ப்பதில் அவர்கள் பங்கு வகிக்க வேண்டும்," என்று அவர் இன்று DHL எக்ஸ்பிரஸ் வளாகத்தின் தொடக்க விழாவில் தனது உரையின் போது கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset