நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் அன்பிணைப்பு இயக்கத்தின் சார்பில் MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024: காஜாங்கில் சிறப்பாக நடந்தேறியது

காஜாங்:

மக்கள் அன்பிணைப்பு இயக்கத்தின் சார்பில் MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024 நிகழ்ச்சி நேற்றிரவு காஜாங்கில் உள்ள DEWAN SERBAGUNA ORANG RAMAI, BUKIT MEWAH இல் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக 120 பேர் பயனடைந்தனர். இந்த MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024 நிகழ்ச்சிக்கு MM OIL  நிறுவனமும் AASIA ENERGY நிறுவனமும் முதன்மை ஆதரவாளர்களாக விளங்கினர். 

மூத்த குடிமக்களில் 30 பேருக்கு தீபாவளி பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்க அவர்களுக்கு முறையே பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. ஒரு பற்றுச்சீட்டு தலா 100 வெள்ளியாகும்  என்று இயக்கத்தின் உதவி தலைவர் குமணன் சீரங்கன் கூறினார்.    

அதுமட்டுமல்லாமல், பி40 பிரிவின் 80 குடும்பங்களுக்கு தீபாவளி பெருநாளை முன்னிட்டு உணவுக்கூடை வழங்கப் படட்டது. மேலும் 30 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டும் இறுதியாக, 30 பேர் பார்வை குறைபாடுடை யோர் தரப்புக்கு 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தொடங்கிய நிலையில் எதிர்பார்த்த மக்கள் எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 800 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக இயக்கத்தின் செயலாளர் மார்கரட் சூசை தெரிவித்தார். இதில் சிலம்பம், பரத நாட்டியம் ஆகிய படைப்புகள் படைக்கப்படும் வேளையில் மூன்று பார்வைக்குறையுடை யோர் நிகழ்ச்சி ஒன்றை படைத்து வருகையாளர்களை வரவேற்றனர்.

இதற்கிடையே, காஜாங் சட்டமன்ற உறுப்பினர் அரசியல் செயலாளர் கைருல், காஜாங் காவல்துறை அதிகாரி ஏ.எஸ்.பி பிரேம், பிஜேகேஆர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன், பிஜேகேஆர் செயலாளர் மார்கரெட் தேவி சூசை, PERSATUAN JARINGAN KASIH RAKYAT இயக்கத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

May be an image of one or more people and table

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி வெற்றி பெற பக்க பலமாக விளங்கிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் இயக்கத்தின் சார்பில் தனது நன்றியை சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் தெரிவித்து கொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset