நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழாவில் திரண்ட பொதுமக்கள் 

கோலாலம்பூர்:

அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா நேற்று மாலை கோலாலம்பூர் மாசா பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  பொதுமக்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்தனர். 

மாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழாவில் பெரஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி வரவேற்புரையாற்றினார். 

முதலில் மனிதநேயம் போதித்த மாநபி (ஸல்) எனும் தலைப்பில் உஸ்தாத் மௌலவி முஹம்மது சாலிஹ் மன்பயீ உரை நிகழ்த்தினார். 

பன்முக சமூகத்தில் பெருமானார் (ஸல்) எனும் தலைப்பில் அல்ஹாபிழ் மௌலவி Dr. S.A. செய்யது இபுறாஹீம் அல்புஹாரி உரையாற்றினார். 

May be an image of 1 person, dais and text

மக்ரிப் தொழுகை இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த இரண்டாவது அமர்வு ஹாஜி செய்யது அலியின் பெருமானாரை புகழும் பாடலோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி முஹம்மது இக்பால் பேசும்போது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள முஃப்தி சட்ட மசோதாவின் உள்ளர்த்ததை சுருக்கமாக விளக்கி பேசினார். 

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா 2024 மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது என்று பெர்மிமின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் மகிழ்ச்சியுடன் கூறினார். பெர்மிம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியை பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு மீண்டும் நினைவுறுத்தினார். இந்த நிதி மக்களால் மக்களுக்கு உதவி செய்யும் ஓர் உன்னதமான நபி வழி என்று அறிவுறுத்தினார்.  

பெர்மிம், எம்.எம்.ஒய்.சி, ப்ரெஸ்மா, மாவார், சிம்ஸ், இஸ்லாமிய கல்வி வாரியம் போன்ற அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர். 

மாசா பல்கலைக் கழக நிறுவனர் பேராசிரியர் டாக்டர் டான்ஸ்ரீ முஹம்மது ஹனிபா நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 

May be an image of 5 people, headscarf and dais

சிறப்பு பேச்சாளர் சென்னை அடையார் பள்ளியின் தலைமை இமாம் "மாநபி கண்ட மறுமலர்ச்சி" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். புரட்சித் தலைவர் என்பதற்கான வரைவிலக்கணத்தை அழகான உதாரணங்களோடு அவர் கூறினார். உலகை தமது ஆளுமையாலும் நற்குணத்தாலும் எவ்வாறு மாற்றி அமைத்தார் என்பதை விளக்கினார். 

இந்த நிகழ்ச்சியை பெர்மிமின் துணைத் தலைவர் அஸ்ரின் மற்றும் எம்.எம்.ஒய்.சி.யின் இஸ்லாமிய பிரிவு தலைவர் ஷேக் ஜியாவுதீன் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் அமைப்பாளர்களான மாவார் தலைவர் அப்துல் அலீம், எம்.எம்.ஒய்.சி தலைவர் அஸ்மி, சிம்ஸ் தலைவர் எம்.இசட்.கனி, பெர்மிம் இஸ்லாமிய பிரிவு தலைவர் அன்வர் அலி, பெர்மிம் சமூக பொருளாதார மேம்பாட்டு தலைவர் கலிருஸ்ஸமான், பெர்மிம் பொருளாளர் ஷேக் ஜமீல், ஈமான் கட்சியின் தேசியத் தலைவர்  டத்தோ மொஹ்சின், ப்ரெஸ்மா செயலாளர் ஹபீப், பெர்மிம் முன்னாள் தலைவர் ஹாஜி தாஜுதீன், பெர்மிம் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மான் ஷா, பினாங்கு முஸ்லிம் லீக் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜா, மிம்காயின் துணைத் தலைவர் டத்தோ. பி.வி. ஹமீது, கிம்மா கட்சி செயலாளர் ஹுசைன் ஜமால்உட்பட தன்னார்வ தொண்டர்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மத்ரஸாவினர்,   பினாங்கு, மலாக்கா, ஈப்போ, நிலாயிலிருந்தும் பொதுமக்கள் வந்து கலந்து சிறப்பித்தனர்.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset