நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் 62 கிலோ 'ஷாபு' பறிமுதல்: போலிசாரிடம் சிக்கிய கடத்தல் கும்பல்

சுங்கை பெட்டானி:

கோத்தா கோலா மூடா, கம்போங் பெர்மாத்தாங் ரெங்கான் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 62 கிலோகிராம் 'ஷாபு' வகை போதைப்பொருளைப் போலிசார் கைப்பற்றினர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக 47 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த விடுதியின் அறை ஒன்றில், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொட்டலங்களை அதிகாரிகள் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்தோனேசிய ஆடவர், போதைப்பொருள் கிடங்கின் காவலாளியாகச் செயல்பட்டு வந்ததும், ஒவ்வொரு கிலோகிராம் போதைப்பொருளுக்கும் சுமார் 116 ரிங்கிட் ஊதியமாகப் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அந்த விடுதியை வாடகைக்கு எடுத்ததாகக் கருதப்படும் 42, 32 வயதுடைய தம்பதியினரை பினாங்கின் பெனாகா பகுதியில் வைத்து போலிசார் கைது செய்தனர். 

பிடிபட்ட மூவருக்கும் முன்னைய குற்றப்பதிவுகள் ஏதுமில்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இக்கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset