செய்திகள் மலேசியா
சுற்றுலா அனுமதி விதிமீறல்: 9,497 வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவுத் துறை நடவடிக்கை
கோலாலம்பூர்:
சுற்றுலா அனுமதி கொண்டு நாட்டில் நுழைந்து பின்னர் உணவகம், தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக வேலை செய்வதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களை குடிநுழைவுத் துறை தொடர்ந்து கண்டறிந்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,618 சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 9,497 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அதில் 1,158 பேர் குடிநுழைவு விதி 39(பி), அனுமதி நிபந்தனை மீறல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தற்காலிக வேலை அனுமதி, சமூகப் பயண அனுமதி போன்றவற்றை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அனுமதி விதிமீறல் காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் வங்காளதேசம் நாட்டவர்கள் மிக அதிகமாவர். அதைத் தொடர்ந்து தாய்லாந்து (248), இந்தோனேசியா (111), சீனா (86), பாகிஸ்தான் (51) ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 482 பேர் சுற்றுலா அனுமதியை தவறாக பயன்படுத்தியதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தாய்லாந்து (235), வங்காளதேசம் (83), சீனா (62), இந்தோனேசியா (62), பாகிஸ்தான் (13), பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் சிலர் சட்ட அனுமதி இன்றி வணிக வளாகங்களை நிர்வகித்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சட்டத்தை மீறும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் குடிநுழைவு துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 11:01 am
முன்னாள் அம்னோ அரசியல்வாதி மரினா யூசோப் காலமானார்
March 12, 2026, 9:59 am
கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது: 25 வயது இளைஞர் நண்பனால் குத்திக்கொலை
March 12, 2026, 9:49 am
அதிகாலை விபத்து: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் காரிலிருந்த பெண் மீட்பு
March 12, 2026, 9:27 am
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்
March 12, 2026, 9:18 am
