செய்திகள் மலேசியா
இனவாதத்தை தூண்டுபவர்களில் சிலர் கைது, சிலர் ஓடிவிட்டனர்; சட்டத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
நாட்டில் இனவாதத்தை தூண்டுபவர்களில் சிலர் கைது, சிலர் ஓடிவிட்டனர்.
இருந்தாலும் சட்டத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமத் காலிட் இஸ்மாயிலும் கலந்துக் கொண்டார்.
தேசிய சட்டத் துறை தலைவரும் கலந்துக் கொண்டார்.
இவர்கள் முன்னிலையில் நாட்டில் நிகழ்ந்து வரும் இனவாத தூண்டுதல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஆலயங்களை உடைப்பது, திரிசூலத்தை மிதிப்பது என அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றம் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டது.
தவறு செய்பவர்கள் முதலில் கைது செய்யப்படுவார்கள். பின் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் நாட்டை விட்டு ஓடி விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
எது எப்படி இருந்தாலும் இனவாதத்தை தூண்டுபவர்கள் சட்டத்தில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
இதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
