செய்திகள் மலேசியா
முன்னாள் அம்னோ அரசியல்வாதி மரினா யூசோப் காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
1980கள், 1990களில் குறிப்பிடத்தக்க பெண் அரசியல்வாதியாக இருந்த மரினா யூசோப், 84 வயதில் காலமானார்.
முன்னாள் அம்னோ தலைவரான அவர், கோலாலம்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாலை 5.16 மணியளவில் உயிரிழந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.
அவரது மகளும் நடிகையுமான ஐடா நெரினா கூறுகையில், மரினா தனது குடும்பத்தினர்கள் அருகில் இருந்தபோது கடைசி மூச்சை விட்டதாக தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு அம்னோ கட்சித் தேர்தல்களுக்கும் அதன் பின்னர் அந்தக் கட்சி பதிவு ரத்து செய்யப்பட்டதற்கும் பின், அவர் தெங்கு ரஸாலே ஹம்சா அமைத்த செமங்காட் 46 (Semangat 46) கட்சியில் இணைந்தார்.
1999 ஆம் ஆண்டு அவர் பிகேஆர் (PKR) கட்சியில் இணைந்து, வான் அஸிஸா வான் இஸ்மாயில் தலைமையில் துணைத் தலைவராக பதவி வகித்தார்.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், PKR கட்சியின் சார்பில் வங்சா மாஜு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும் தேசிய முன்னணியின் ஜுல்ஹாஸ்னான் ரஃபிக் 5,618 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் அவர் தோல்வியடைந்தார்.
அரசியல் பங்களிப்புகளுக்கு அப்பாற்பட்டும், மரினா நிறுவனத் துறையிலும் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 1:17 pm
மிரட்டல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜம்ரி வினோத்தை அழைக்க போலிசார் திட்டமிட்டுள்ளனர்
March 12, 2026, 1:15 pm
தொழிலாளர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்: டத்தோஸ்ரீ ரமணன்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 10:19 am
சுற்றுலா அனுமதி விதிமீறல்: 9,497 வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவுத் துறை நடவடிக்கை
March 12, 2026, 9:59 am
