செய்திகள் மலேசியா
அதிகாலை விபத்து: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் காரிலிருந்த பெண் மீட்பு
பாலிங்:
கெடா மாநிலம் பாலிங் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் கார் ஒன்றில் சிக்கியிருந்த 56 வயது பெண்ணை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
இன்று அதிகாலை 1.26 மணியளவில் கம்போங் பாடாங் செடோல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. பெண் ஓட்டிச் சென்ற புரோட்டான் X50 கார், 57 வயது ஆண் ஓட்டிய ஃபோர்டு ரேஞ்சர் நான்கு சக்கர வாகனம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணின் கால்பகுதி கார் உள்ளே சிக்கி காயமடைந்தார். அவசர அழைப்பைப் பெற்றதும், பாலிங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் கடுமையான காயம் ஏற்படாமல் இருக்க சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி கவனமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காயமடைந்த பெண் கூலிம் நோக்கி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், ஆண் ஓட்டுநர் சுங்கை பெட்டாணி நோக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை அதிகாலை 4.33 மணிக்கு நிறைவடைந்தது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 11:01 am
முன்னாள் அம்னோ அரசியல்வாதி மரினா யூசோப் காலமானார்
March 12, 2026, 10:19 am
சுற்றுலா அனுமதி விதிமீறல்: 9,497 வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவுத் துறை நடவடிக்கை
March 12, 2026, 9:59 am
கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது: 25 வயது இளைஞர் நண்பனால் குத்திக்கொலை
March 12, 2026, 9:27 am
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்
March 12, 2026, 9:18 am
புன்சாக் ஜாலிலில் ஏற்பட்ட தீ 2 ஹெக்டருக்கும் மேல் பரவியது: தீயணைப்புப் படை தீ அணைக்க போராட்டம்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
