செய்திகள் மலேசியா
கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது: 25 வயது இளைஞர் நண்பனால் குத்திக்கொலை
மலாக்கா:
கைப்பேசி தொடர்பான தகராறு காரணமாக நண்பரால் குத்தப்பட்டு 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று இரவு கம்போங் சுங்கை உடாங் பகுதியில் இடம்பெற்றது.
இரவு 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 44 வயது சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் பலமுறை குத்தியதாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவரின் இடது மார்பு பகுதியில் குறைந்தது மூன்று குத்துக் காயங்கள் காணப்பட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் தாம் வழங்கிய கைப்பேசியை திரும்பப் பெற சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை சந்தித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்தச் சந்திப்பு பின்னர் தகராறாக மாறி, அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு பதற்றமடைந்த சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சுமார் 300 மீட்டர் தூரம் துரத்தி, சுங்கை உடாங் நகர கடை வீடுகளுக்கு அருகில் பிடிக்க உதவினார்.
தப்பிக்க முயன்ற சந்தேகநபர் பொதுமக்களின் கார் ஒன்றில் ஒளிய முயன்றபோதும், பொதுமக்களால் கட்டுப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், சந்தேகநபரும் உயிரிழந்தவரும் முன்பு குற்றச்செயல், போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் கொண்டவர்கள் எனவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கொலை குற்றமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் சம்பவத்துக்குப் பிறகான புகைப்படங்கள், சந்தேகநபர் பிடிக்கப்பட்ட காட்சிகள் பரவி வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 11:01 am
முன்னாள் அம்னோ அரசியல்வாதி மரினா யூசோப் காலமானார்
March 12, 2026, 10:19 am
சுற்றுலா அனுமதி விதிமீறல்: 9,497 வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவுத் துறை நடவடிக்கை
March 12, 2026, 9:49 am
அதிகாலை விபத்து: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் காரிலிருந்த பெண் மீட்பு
March 12, 2026, 9:27 am
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்
March 12, 2026, 9:18 am
