நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்

கோம்பாக்:

நேற்று இரவு இங்குள்ள ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பிரிவின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்தார்.

போலிசாரால் கைது செய்யப்படாமல் இருக்க தனது நண்பருடன் தப்பிச் செல்லும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக தனது அதிகாரிகள் குழு இரவு 9.07 மணிக்கு அங்கு சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர்கள் இருவரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். 

52 வயதான உள்ளூர்வாசி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொருவர் உயிர் பிழைத்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சோதனையில் வீட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset