செய்திகள் மலேசியா
விமான நிலையப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: கே.எல்.ஐ.ஏ இரண்டில் அமலாகிறது புதிய வாகனக் கட்டுப்பாட்டு முறை
பெட்டாலிங் ஜெயா:
கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 'வாகன அணுகல் மேலாண்மைத் திட்டத்தின்' (VAMS) சோதனை தொடங்கியுள்ளதாக மலேசிய விமான நிலைய வாரியம் அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சோதனை, பயணிகளின் வருகையையும், புறப்பாடுகளையும் உள்ளடக்குகிறது.
இந்தத் திட்டத்தின்படி, தானியங்கி தடுப்பு வாயில்கள் மூலம் வாகனங்களின் நுழைவும், வெளியேறும் நேரம் கண்காணிக்கப்படும். பயணிகள் இறங்குவதற்கும் அல்லது ஏறுவதற்கும் 10 நிமிடங்கள் சலுகை நேரமாக வழங்கப்படும்.
இந்த நேரத்தைத் தாண்டி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். முதல் முனையத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 10 நிமிடங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 10 ரிங்கிட் முதல் அதிகபட்சமாக 100 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை டச் என் கோ (Touch ‘n Go) அல்லது வங்கி அட்டை மூலம் செலுத்தலாம்.
விமான நிலையத்தின் தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யவும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் இசானி கானி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முனையத்தில் நாளொன்றுக்குச் சுமார் 16,000 வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புதிய முறை நெரிசலை பெருமளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 1:17 pm
மிரட்டல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜம்ரி வினோத்தை அழைக்க போலிசார் திட்டமிட்டுள்ளனர்
March 12, 2026, 1:15 pm
தொழிலாளர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்: டத்தோஸ்ரீ ரமணன்
March 12, 2026, 12:23 pm
அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக நிஸாமுடின் ஹமீத் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 11:01 am
