நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புன்சாக் ஜாலிலில் ஏற்பட்ட தீ 2 ஹெக்டருக்கும் மேல் பரவியது: தீயணைப்புப் படை தீ அணைக்க போராட்டம்

கோலாலம்பூர்:

ஸ்ரீ கெம்பங்கனுக்கு அருகிலுள்ள புன்காக் ஜாலிலின் சரிவுகளில் ஏற்பட்ட தீ, சம்பவம் கண்டறியப்பட்டதைவிட பெரிய பகுதிக்கு பரவியுள்ளது.

நேற்று இரவு 9 மணி நிலவரப்படி தீ பரவி, மொத்த பரப்பளவு இரண்டு ஹெக்டேருக்கும் அதிகமாக எரிந்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின்  செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட, ​​27 தீயணைப்பு வீரர்களுடன் மொத்தம் தீ அணைக்கும் பணி  மிகுந்த போராட்டத்திற்கு பின் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 2 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது எந்தவொரு குடியிருப்பு கட்டமைப்புகளோ அல்லது வணிக வளாகங்களோ இல்லை.

ஆரம்பத்தில் சுமார் 0.3 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் தீ பரவியது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset