செய்திகள் உலகம்
வீட்டுப்பாடத்தை முடிக்காததால் அச்சம்: 14 மணி நேரமாக மலையில் ஒளிந்திருந்த இரு சிறுவர்கள் மீட்பு
சீனா:
வீட்டுப்பாடத்தை முடிக்காததால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் மலைப்பகுதியில் ஒளிந்திருந்த சகோதரன்-சகோதரி இருவரும் நடுங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
12 வயது சிறுவனும், 11 வயது அவரது தங்கையும் மாலை சுமார் 6 மணியளவில் சீனாவின் கான்சு பகுதியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் காணாமல் போனதை உணர்ந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரிவான தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.
30க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், போலிஸ் நாய்கள், வெப்ப உணர்வு கருவியுடன் கூடிய இயங்காத வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு கடும் குளிரும் மழையும் நிலவிய சூழலில் தேடுதல் நடத்தப்பட்டது.
அந்த நேரத்தில் வெப்பநிலை சுமார் 1 செல்சியஸ் அளவுக்கு குறைந்திருந்தது. மெல்லிய உடையுடன் இருந்த அந்த இரு குழந்தைகளும் மீட்பு குழுவின் அழைப்பை கண்டதும் திட்டமிட்டு மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சுமார் 14 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, மறுநாள் காலை 10 மணியளவில் ஒரு தொலைவான மலை பள்ளத்தாக்கில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் கடும் குளிரால் கட்டுப்பாடின்றி நடுங்கிய நிலையில் இருந்ததுடன் முகம் வெளிறி, உதடுகள் நீலநிறமாக மாறியிருந்தன.
மருத்துவ குழு பரிசோதித்ததில், அவர்களுக்கு உடல் வெப்பக் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சைக்குப் பிறகு நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வி தொடர்பாக குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், அவர்களுடன் நண்பரைப் போல உரையாடி, அவர்களுக்கு மனநல கவனத்தை வழங்குவது முக்கியம் என காவல்துறை பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
