செய்திகள் உலகம்
போர்மோதலால் லெபனானில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம்
ஜெனீவா:
லெபனானில் தீவிரமடைந்துவரும் போர் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலான காலத்தில், நாடு முழுவதும் சுமார் ஏழு இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாட்டு அமீரக அமைப்பு தெரிவித்துள்ளது.
லெபனான் அமைப்பின் பிரதிநிதியான கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திடீர் தாக்குதல்களால் பல குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவித்தார்.
மார்ச் 2ஆம் தேதி முதல் 53க்கும் மேற்பட்ட கிராமங்கள், மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
லெபனான் அதிகாரிகளின் தகவல்படி, அரசின் இணைய தளத்தில் வீடிழந்தவர்களாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் உறவினர்களுடன் தங்கியுள்ளதுடன், சிலர் குறைந்த பொருட்களுடன் வீடுகளை விட்டு வெளியேறி தங்குமிடம் தேடி வருகின்றனர்.
இந்த வன்முறை சூழ்நிலை அண்டை நாடான சிரியாவிற்கும் மக்கள் இடம்பெயர்வை ஏற்படுத்தியுள்ளது. மோதல் தீவிரமானதிலிருந்து இதுவரை 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரியர்கள், 7,700க்கும் மேற்பட்ட லெபனான் குடிமக்கள் சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகும் பல குடும்பங்கள் மீண்டும் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகி, பொதுமக்கள் கடும் மனஅழுத்தம், அச்சத்தில் உள்ளதாக பில்லிங் தெரிவித்தார்.
மோதல்கள் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஆயிரம் பொதுமக்கள் மேலும் துன்புறுகின்றனர் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பும் தடையற்ற மனிதாபிமான உதவி அணுகலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
