நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடக பயன்பாட்டு தடை: இந்தோனேசியா எச்சரிக்கை

ஜகார்தா: 

மார்ச் 28 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களை அணுகுவதைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடு அல்லாத நாடாக இந்தோனேசியா இருக்கும் என்று தகவல் தொடர்பு, டிஜிட்டல் அமைச்சர் மியூத்யா ஹஃபித் தெரிவித்தார்.

டிஜிட்டல் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மின்னணு அமைப்பு நடத்துனர்களை ஒழுங்குபடுத்தும் அரசாங்க ஒழுங்குமுறை (PP) TUNAS அல்லது பாதுகாப்பான, ஆரோக்கியமான டிஜிட்டல் தளம் குழந்தைகளுக்கான நடத்தை விதிகளுக்கு இணங்க அரசாங்கம் ஒரு அமைச்சரவை ஒழுங்குமுறையை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள், நெட்வொர்க்கிங் சேவைகள் போன்ற அதிக ஆபத்துள்ள தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதும் அடங்கும் என்று மியூத்யா தெரிவித்தார்.

"நம் குழந்தைகள் அதிகரித்து வரும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இதில் ஆபாசப் படங்கள், பகடி வதை, இணைய மோசடி மட்டுமல்லாமல் மிகவும் கவலையளிக்கும் வகையில் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவையும் அடங்கும்.

செயல்படுத்தப்பட்ட தேதியிலிருந்து தொடங்கி, யூடியூப், டிக்டோக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட், எக்ஸ், பிகோலிவ், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள தளங்களில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சொந்தமான சமூக ஊடகக் அகப்பக்கங்கள் செயலிழக்கத் தொடங்கும் என்றும் அனைத்து தளங்களும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கும் வரை இந்தச் செயல்முறை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கை குழந்தைகளின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என நாங்கள் நம்கிறோம் ,” என அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset