செய்திகள் உலகம்
அஞ்சல் சேவையைப் பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
தக் பாய்:
மலேசியாவுக்கு அஞ்சல் சேவையின் மூலம் கடத்த முயன்ற 5 லட்சம் யாபா போதை மாத்திரைகளை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நராதிவாட் பகுதியின் காவல்துறை தலைவர் பிரயோங் கோட்சாகா தெரிவித்ததாவது;
கடந்த மாதம் முதல் மூன்று கடத்தல் முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த போதைப்பொருள் மாத்திரைகள் தாய்லாந்தின் வடபகுதியில் இருந்து சுங்காய் கோலோக் பகுதிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கிளாந்தான் வழியாக மலேசியாவுக்கு கடத்த திட்டமிடப்பட்டது.
இந்த சம்பவங்கள் ரூசோ, ரங்கே, சுங்கை கோலோக், பகுதிகளில் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு முயற்சியிலும் 10,000 முதல் 500,000 வரை யாபா மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் கும்பல்கள் தற்போது அஞ்சல் சேவைகளை பயன்படுத்தி அந்த பொருட்களை அனுப்புவது புதிய முறையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். சில சமயங்களில் மற்றவர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி யாபா மாத்திரையை அனுப்புவதால் விசாரணை சிக்கலாகிறது.
மேலும் சில சம்பவங்களில் அஞ்சல் நிறுவன ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பொதுவாக இந்த போதைப்பொருட்கள் தாய்லாந்தின் வடபகுதியில் இருந்து தெற்கு எல்லைப் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மலேசியாவுக்கு கடத்தப்படுகின்றன. சில நேரங்களில் அதிகாரிகள் கைப்பற்றும் அச்சம் ஏற்பட்டால் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எல்லை குற்றங்களை கட்டுப்படுத்த, சுங்காய் கோலோக் நதிக்கரையில் முள் கம்பி வேலியும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:24 pm
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 6:58 pm
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பேரிடர்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
March 7, 2026, 4:40 pm
